உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பிஜி தமிழ் வம்சாவளியினர் தமிழ் கற்க இந்தியா ஏற்பாடு | Fiji tamil | PM Modi

பிஜி தமிழ் வம்சாவளியினர் தமிழ் கற்க இந்தியா ஏற்பாடு | Fiji tamil | PM Modi

தென் ஆப்பிரிக்காவில் உள்ள தீவு நாடு பிஜி. இங்குள்ள மக்கள் தொகையில் 40 சதவிகிதம் பேர் இந்திய வம்சாவளியினர். 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் இருந்து பலர் இங்கு வேலைக்காக அழைத்து வரப்பட்டனர். இப்போது அவர்களின் வம்சாவளியினர் பிஜி தீவில் வசிக்கின்றனர். தமிழர்களாக இருந்தாலும் இங்கே பலருக்கு தமிழ் பேச தெரியாது. ஆனால் தமிழ் பயன்பாடு, சடங்குகள், பழக்கவழக்கங்களை இன்னும் விடாமல் கடைபிடித்து வருகின்றனர். தீ மிதி திருவிழா நடக்கிறது. தை மாசம் காவடி திருவிழாவும் நடந்து வருகிறது. கூழ் ஊற்றும் வைபவமும் ஆண்டு தோறும் நடைபெறுகிறது. தலைநகரம் சுவாவில் ஒரு மாரியம்மன் கோயிலும் உள்ளது.

நவ 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை