வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இது ஒரு வியாதி மாதிரிங்க
திரிணாமுல் எம்பி மொய்த்ரா மீது ராய்ப்பூர் போலீஸ் வழக்கு பதிவு FIR Against Mahua Moitra | TMC MP| A
நாட்டின் சுதந்திர தின உரையில், பிரதமர் மோடி ஊடுருவல்காரர்கள் குறித்து பேசினார். அசாம், மேற்கு வங்கம், பீகார் மாநிலங்களில் வங்கதேச ஊடுருவல்காரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பற்றியதாக அவரது உரை அமைந்தது. பிரதமர் மோடியின் பேச்சுக்கு, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா கடும் கண்டனம் தெரிவித்தார். நாட்டின் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளனர். அப்படியென்றால், ஊடுருவல்காரர்கள் வருகைக்கு மத்திய உள்துறை அமைச்சர் பொறுப்பேற்பாரா? வேண்டுமென்றால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையை வெட்டி மோடி முன் வைக்கலாம் என, மொஹுவா மொய்த்ரா பேசினார். மொய்த்ராவின் பேச்சுக்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்தது. பல இடங்களில் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக பாஜவினர் போராட்டங்கள் நடத்தினர். ஒரு சில காங்கிரஸ் தலைவர்கள் கூட மொய்த்ரா பேச்சுக்கு ஆட்சேபம் தெரிவித்தனர். பாஜ ஆளும் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், மொஹுவா மொய்த்ராவுக்கு எதிராக கோபால் சாமோன்டோ என்பவர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், மொய்த்ரா மீது வழக்குப்பதியப்பட்டது. மொய்த்ராவின் பேச்சை எந்த வகையிலும் ஏற்க முடியாது என சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தேவ் சாய், தெரிவித்துள்ளார். அவர் மீது கட்சி ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், அவரது பேச்சில் மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கும் உடன்பாடு உள்ளதா என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும் கூறியுள்ளார். #MahuaMoitra | #FIRagainstMahuaMoitra| #TMCMP| #AmitShah| #CaseAgaistMahua|
இது ஒரு வியாதி மாதிரிங்க