பணியாளர்களை கட்டி தழுவி உருகிய கெஜ்ரிவால் | Delhi Ex-CM Arvind Kejriwal Vacates Official Home
முதல்வர் பங்களாவை காலி செய்தார் கெஜ்ரிவால் டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த மாதம் ஜாமினில் வெளியே வந்தார். முதல்வர் அலுவலகத்திற்கு செல்லக் கூடாது, கோப்புகளில் கையெழுத்திடக் கூடாது என சுப்ரீம் கோர்ட் நிபந்தனை விதித்ததை அடுத்து, முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஆம் ஆத்மியை சேர்ந்த ஆதிஷி முதல்வரானார். ஆதிஷி முதல்வராக பொறுப்பேற்றாலும், அவர் கெஜ்ரிவாலின் நாற்காலியில் அமரவில்லை. அவரது நாற்காலியை காலியாக விட்டுவிட்டு, அதன் அருகே தனி நாற்காலி போட்டு அதில் அமர்ந்து பணியாற்றி வருகிறார். முதல்வர் பதவியில் இருந்து விலகிய கெஜ்ரிவால் கட்சி பணிகளை கவனிக்கிறார். டில்லியில் என்னென்ன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும், என்னென்ன குறைகளை சரி செய்ய வேண்டும் என, முதல்வர், அமைச்சர்களுக்கு அறிவுரையும் வழங்கி வருகிறார்.