'தி கோட்' இறங்கியதும் திமுக போட்ட தடாலடி உத்தரவு | GOAT The Greatest of All Time | GOAT review | TVK
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கிய விஜய், இனி படத்தில் நடிக்கமாட்டேன் என்று அறிவித்தார். தி கோட் தான் தனது கடைசி படம். அதன் பிறகு தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று கூறி இருந்தார். பெரிய எதிர்பார்ப்புக்கு ஊடே நேற்று உலகம் முழுதும் விஜயின் தி கோட் படம் ரிலீஸ் ஆனது. தமிழகத்தில் காலை 9 மணி சிறப்பு காட்சிக்கும் அனுமதி தரப்பட்டது. இதனால் அமைச்சர் உதயநிதிக்கு படத்தின் தயாரிப்பாளர் நன்றி தெரிவித்தார். தி கோட் படத்துக்கு அரசு தரப்பில் நெருக்கடி தராவிட்டாலும், கட்சி மாநாடு நடத்த திமுக தரப்பில் நெருக்கடி தருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகம் முழுதும் விஜய் படம் வெளியாகியுள்ள தியேட்டர்களில் 5 நாட்கள் வரை டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது. ஹவுஸ்புல்லான தியேட்டர்களில் படம் பார்க்க திமுகவினரும், அவர்களின் குடும்ப உறுப்பினரும் விரும்புவர். டிக்கெட் இல்லை என்பதால், தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தும் வகையில் கட்சி பதவி லெட்டர் பேடுகள், விசிட்டிங் கார்டுகளை பயன்படுத்தி டிக்கெட் கேட்பது வழக்கம். ஆனால் இப்படி யாரும் விஜய் படத்துக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்று தலைமை உத்தரவிட்டுள்ளது.