உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சட்டசபையில் சி.ஏ.ஜி அறிக்கையை தாக்கல் செய்தார் முதல்வர் ரேகா Government Lose |Rs- 2000 crore|new-e

சட்டசபையில் சி.ஏ.ஜி அறிக்கையை தாக்கல் செய்தார் முதல்வர் ரேகா Government Lose |Rs- 2000 crore|new-e

2020 முதல் 2024 வரை டில்லியில் 2வது முறையாக ஆம்ஆத்மி ஆட்சி நடந்தது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது, புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. இதில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. சிபிஐ, அமலாக்க துறை விசாரணை நடத்தி டில்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. அதன்பிறகு புதிய மதுபான கொள்கை டில்லி அரசால் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் முதல்வராக இருந்த கெஜ்ரிவாலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளிவந்த அவர் 2025 டில்லி சட்டசபை தேர்தலை சந்தித்தார். ஆனால் தேர்தல் முடிவில் பாஜ வெற்றி பெற்று ரேகா குப்தா தலைமையில் ஆட்சி அமைத்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கெஜ்ரிவால் அரசின் ஊழல்கள் குறித்த தலைமை கணக்கு தணிக்கையாளர்(சிஏஜி) அறிக்கைகளை சட்டசபையில் தாக்கல் செய்வோம் என தேர்தல் பிரசாரத்தின்போது பாஜ வாக்குறுதி அளித்திருந்தது. இந்த நிலையில் தான் முதல்வர் ரேகா குப்தா தலைமையில் டில்லி சட்டசபையின் முதல் கூட்ட தொடர் திங்களன்று துவங்கியது. முதல் நாளிலேயே ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள், அம்பேத்கர், பகத்சிங் படங்களை முதல்வர் அறையில் இருந்து அகற்றியது தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து சட்டசபை வளாகத்தில் தர்ணா செய்தனர். செவ்வாயன்று நடந்த 2வது நாள் கூட்டத்தில் கவர்னர் உரையாற்றும்போதும், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் அதே பிரச்னையை எழுப்பி கூச்சலிட்டனர். இதனால் எதிர்க்கட்சி தலைவர் ஆதிஷி உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் விஜயேந்தர் குப்தா உத்தரவிட்டார். கவர்னர் உரைக்கு பிறகு, 14 ஆண்டுகளாக தாக்கல் செய்யப்படாமல் இருந்த CAG அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், 2017 முதல் 2021 வரையிலான 4 ஆண்டு கால ஆம் ஆத்மி அரசில், மதுபான விநியோகங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதனால், அரசுக்கு கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 26 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி