சிரிச்சே திமுகவை பங்கம் செய்த கவர்னர் ரவி | Governor Ravi attacks DMK | DMK vs Ram | Sanatan Dharma|
சனாதனம் டெங்குனு சொன்னவங்க அப்படியே கப்சிப் ஆன மர்மம் என்ன திமுகவை துவம்சம் செய்த கவர்னர் ரவி ஹரி, ஹேமா ஹரி ஆகியோர் இணைந்து எழுதிய ஸ்ரீராமா இன் தமிழகம்: பிரிக்க முடியாத பந்தம் என்ற தமிழ், ஹிந்தி, ஆங்கில நுால் வெளியீட்டு விழா சென்னை கவர்னர் மாளிகையில் நடந்தது. கவர்னர் ரவி நுாலை வெளியிட மூத்த அரசியல் தலைவர் ஹெச்.வி.ஹண்டே, துக்ளக் வார இதழ் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். விழாவில் சிவன், ராமர், சனாதன தர்மம் பற்றி கவர்னர் ரவி பரபரப்பாக பேசினார். திமுகவையும் வெளுத்து வாங்கினார். அவர் பேசியதாவது: இந்திய மக்கள் அனைவரது மனங்களிலும் நிறைந்திருப்பவர் ராமர். நாடு முழுதும் ராமர் கோவில்கள் உள்ளன. ராமர் சம்பந்தப்பட்ட பெயர்களை நாடெங்கும் மக்கள் வைத்துள்ளனர். ராமர் இந்தியாவை இணைக்கும் பாலமாக இருக்கிறார். துரதிருஷ்டவசமாக அழகிய ஆன்மிக பூமியான தமிழகத்தில், ராமருக்கு எதிரான பிரசாரங்கள் நடந்தன. ராமர் கடவுளே இல்லை; ராமருக்கும், தமிழகத்திற்கும் தொடர்பு இல்லை; அவர் வட இந்திய கடவுள் என்றெல்லாம் பிரசாரம் நடந்தது. ஆனால், ராமர் இந்தியாவில் எங்கும் நிறைந்திருக்கிறார். தமிழகத்தில் ராமர் கோவில்கள் உட்பட, ராமரோடு தொடர்புடைய இடங்கள் ஏராளம் உள்ளன. அவற்றை ஸ்ரீராமா இன் தமிழகம் நுால் ஆவணப்படுத்தியுள்ளது. குக்கிராமங்களிலும் ராமர் கோவில்கள் உள்ளன.