அரியானாவில் தேர்தல் அறிக்கை வெளியிட்டது பாஜ! Haryana | Election Manifesto | BJP
அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5ம் தேதி நடக்க உள்ளது. அங்கு மீண்டும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என பா.ஜ தீவிரம் காட்டி வருகிறது. சட்டசபை தேர்தல் அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், பா.ஜ தலைவருமான நட்டா வெளியிட்டார். அரியானாவில் அனைத்து பெண்களுக்கும் மாதம் 2100 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். அந்தியோதயா திட்டத்தின் கீழ் சிலிண்டர் ஒன்றுக்கு தலா 500 ரூபாய் வழங்கப்படும். தெற்கு அரியானாவில் சர்வதேச அளவிலான ஆரவல்லி வன சபாரி பூங்கா அமைக்கப்படும். தொழிற்கல்வி படிக்கும் பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். அரியானாவில் வசிக்கும் அக்னி வீரர்களுக்கு கட்டாயம் அரசு வேலை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்த நிலையில் பா.ஜ 2,100 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. நிகழ்ச்சியில் பேசிய நட்டா, காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெற்று காகிதம். அவர்கள் கடமைக்காக வாக்குறுதிகளை வெளியிடுகின்றனர். மக்களை ஏமாற்றுவதற்காக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடுகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன், ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி எப்படி இருந்தது? அவர்களது ஆட்சி நில மோசடிகளுக்கு பெயர் பெற்றது. நாங்கள் அரியானா மக்களுக்கு இடைவிடாமல் சேவை செய்து வருகிறோம், என்று கூறினார்.