வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பணக்கார நண்பர்களுக்கு கமிசன் வருமானம் தடங்கல் இல்லாமல் வரணுமே?
இந்தியாவின் பெரிய எதிரி... மோடி பரபரப்பு பேச்சு | h1b visa fee hike | modi vs trump | us vs india
அமெரிக்காவில் தங்கி இருந்து வேலை செய்யும் வெளிநாட்டு மக்களுக்கு வழங்கப்படும் எச்1பி விசா கட்டணத்தை 88 லட்சம் ரூபாயாக உயர்த்தி அதிரடி காட்டினார் அதிபர் டிரம்ப். அமெரிக்காவின் இந்த விசாவை வைத்திருக்கும் 70 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பதால், நமக்கு தான் இது பெரிய பாதிப்பு. இந்த நடவடிக்கைக்கு பதில் அளிக்கும் விதமாக நம் பிரதமர் மோடி பேசிய அதிரடி பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தின் பாவ்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது: இந்தியா இன்று வேகமாக முன்னேறி வருகிறது. நமக்கு உலகில் எந்த பெரிய எதிரியும் இல்லை. நமக்கு இருக்கும் மிகப்பெரிய எதிரி என்றால், நாம் மற்ற நாடுகளை சார்ந்திருப்பது தான். இது தான் நம் பெரிய எதிரி. இதை தோற்கடிக்க வேண்டும். அந்நிய சார்பு அதிகமாக இருந்தால் தோல்வி தான் கிடைக்கும். உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நம் நாடு தற்சார்பு நிலையை அடைய வேண்டும். இது தான் நம் நாட்டுக்கு மட்டும் இன்றி சர்வதேச அளவில் அமைதி, ஸ்திரத்தன்மை, செழிப்பை கொண்டு வரும். நாம் மற்றவர்களை சார்ந்து இருந்தால் நம் சுயமரியாதை பாதிக்கப்படும். 140 கோடி மக்களின் எதிர்காலத்தை மற்றவர்களிடம் விட முடியாது. நம் சந்ததியினரின் எதிர்காலத்தை ஆபத்தில் விட முடியாது. இதற்கு எல்லாம் ஒரே மருந்து தற்சார்பு தான் என்று மோடி சொன்னார். இந்தியாவுக்கு டிரம்ப் அடாவடித்தனமாக 50 சதவீத வரியை விதித்தார். அப்போது இருந்து தற்சார்பு பொருளாதாரம் முழக்கத்தை மோடி முன்வைத்து வருகிறார். நமக்கு தேவையானதை நாமே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும் என்று நாட்டு மக்களை வலியுறுத்தி வருகிறார். இப்போது இந்தியர்களை பாதிக்கும் வகையில் அமெரிக்கா விசா கட்டணத்தை உயர்த்தி இருக்கும் நிலையில் மீண்டும் அதே முழக்கத்தை வைத்துள்ளார். #H1BVisaFeeHike #modivstrump #USTariffs #H1Bvisa #EconomicIndependence #IndianEconomy #GlobalTrade #SelfSufficiency #JobCreation #TariffTalk #TechIndustry #ImmigrationPolicy #TradeRelations #Vision2023 #MakeInIndia #IndiaFirst #Leadership #Empowerment #WhatItMeansForIndians #TrumpVsModi #USvsIndia #ImmigrationReform #VisaCosts #NRICommunity #GlobalMobility #IndoUSRelations
பணக்கார நண்பர்களுக்கு கமிசன் வருமானம் தடங்கல் இல்லாமல் வரணுமே?