உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / போர் நிறுத்த வரைவு ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ் Hamas | Accepts| Gaza Ceasefire | Draft Agreement|

போர் நிறுத்த வரைவு ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ் Hamas | Accepts| Gaza Ceasefire | Draft Agreement|

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் ஆயுதக் குழு, 2023 அக்டோபர் 7ல் இஸ்ரேலுக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், 251 பேரை பணய கைதிகளாக பிடித்துச் சென்றது. இதனால் காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. பெரும் தாக்குதலுக்கு பிறகு 117 பணய கைதிகள் மீட்கப்பட்டனர். மற்றவர்களையும் ஹமாஸ் பிடியில் இருந்து மீட்க இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்தது. இரு தரப்புக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா, எகிப்து, கத்தார் போன்ற நாடுகள் எடுக்கும் முயற்சிகளால் மேலும் சில பணய கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இப்போது 94 பணய கைதிகள் ஹமாஸ் பிடியில் இருப்பதாகவும், அவர்களில் 34 பேர் இறந்திருக்க கூடும் என்றும் இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. அவ்வப்போது ஒரு சில பணய கைதிகளின் வீடியோக்களை வெளியிட்டு இஸ்ரேலுக்கு ஹமாஸ் தொடர்ந்து அச்சத்தை ஏற்படுத்தி வந்தது.

ஜன 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ