ஹரியானாவில் இது எப்படி நடந்தது? காங்கிரசுக்கு இப்படியும் டவுட் | Haryana Election Result | BJP vs Co
இப்போது வெளியாகி கொண்டிருக்கும் ஹரியானா தேர்தல் முடிவு காங்கிரஸ் தலையில் இடியை இறக்கி உள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எல்லாம் காங்கிரஸ் தான் இந்த முறை ஹரியானாவில் ஆட்சியைப் பிடிக்கும் என்று அடித்துக் கூறின. காங்கிரஸ் 50 முதல் 60 இடங்கள் வரை பிடிக்கக் கூடும்; பாஜவுக்கு 20 முதல் 30 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று எக்ஸிட் போல் முடிவுகள் கூறின. ஓட்டு எண்ணிக்கை துவங்கியதும் காங்கிரஸ் கை ஓங்கியது. 10 மணிக்கு பிறகு நிலைமை அப்படியே மாறியது. பாஜ மின்னல் வேகத்தில் காங்கிரசை முந்த துவங்கியது. ஒரு கட்டத்தில் ஆட்சியை பிடிக்க தேவையான 45 இடங்களுக்கு மேல் பாஜ முன்னிலை வகித்தது. அந்த நேரத்தில் காங்கிரஸ் 30 முதல் 35 இடங்களில் முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து பாஜ முன்னிலை வைக்கும் இடங்கள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்த வண்ணம் இருந்தது. இதனால் வெற்றி களிப்பில் இருந்த காங்கிரஸ் அப்படியே நிலைகுலைந்தது. கருத்து கணிப்பு முடிவுகள் தங்களுக்கு சாதகமாக இருந்த நிலையில ஓட்டு எண்ணிக்கை நிலவரம் வேறு மாதிரி வந்ததை காங்கிரஸால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வெற்றி கொண்டாட்டங்கள் அப்படியே நிறுத்தப்பட்டன. இதற்கிடையே ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாக காங்கிரஸ் பகிரங்கமாக குற்றம் சாட்டியது.