உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தமிழக காங் ஆபீசில் பெண் நிர்வாகிகள் மோதல்-அதிர்ச்சி TN Congress issue | Haseenasyed vs Ramalakshmi

தமிழக காங் ஆபீசில் பெண் நிர்வாகிகள் மோதல்-அதிர்ச்சி TN Congress issue | Haseenasyed vs Ramalakshmi

மதுரை மேலூர் தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக மகிளா காங்கிரஸ் தலைவியாக இருந்த ஹசீனா சையத் எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவருக்கு சீட் மறுக்கப்பட்டது. காஞ்சிபுரம் முன்னாள் எம்பி விஸ்வநாதனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் கொதித்துப்போன ஹசீனா, கட்சி தலைமைக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். தமிழக காங்கிரஸ் தலைமை முதல் டில்லி மேலிடம் வரை அனைத்து தலைவர்களையும் கடுமையாக விமர்சித்தார். சீட்டை விற்று தின்றுவிட்டனர் என்றும் ஆவேசமாக கூறினார். இதனால் அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக காங்கிரஸ் தலைமை அறிவித்தது.

ஏப் 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை