உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஹேமந்த் சோரன் ஜாமினுக்கு எதிரான ED மனு டிஸ்மிஸ் | Hemant Soren Bail | Supreme Court | ED Case

ஹேமந்த் சோரன் ஜாமினுக்கு எதிரான ED மனு டிஸ்மிஸ் | Hemant Soren Bail | Supreme Court | ED Case

ஐகோர்ட் சொன்னது சரிதான் சுப்ரீம் கோர்ட் தடாலடி! ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நிலம் வாங்கிய விவகாரத்தில், ஹேமந்த் சோரன் நிதி மோசடி செய்ததாக அமலாக்க துறை வழக்கு பதிவு செய்தது. 8 ஏக்கர் நிலத்தை மோசடி செய்து வாங்கியதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை ஜனவரி 31ல் கைது செய்து சிறையில் அடைத்தது. ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். சம்பய் சோரன் முதல்வரானார். ஜார்க்கண்ட் மாநில ஐகோர்ட்டில் ஜாமின் கேட்டு ஹேமந்த் தரப்பில் மனு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த கோர்ட், ஹேமந்த் சோரன் மீதான வழக்குக்கு முகாந்திரம் இல்லை. நிலம் வாங்கியது தொடர்பான நிதி மோசடியில், ஹேமந்த் சோரன் நேரடியாக ஈடுபட்டார் என்பதற்கான ஆதாரங்கள் ஆவணங்களில் இல்லை என கூறி அவரை ஜாமினில் விடுதலை செய்தது. ஐந்து மாதங்களுக்கு பின் ஜூன் 28ல் வெளியே வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வரானார். சோரனுக்கு ஜாமின் வழங்கியதை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதிகள் பி.ஆர் கவை மற்றும் கே.வி. விஸ்வநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஹேமந்த் சோரன் ஜாமினில் விடுவிக்கப்பட்டால், அவர் இதேபோன்ற குற்றத்தை செய்ய வாய்ப்புள்ளது என அமலாக்கத்துறை வாதிட்டது. இந்த வழக்கில் பொய்யாக அவர் இணைக்கப்பட்டதாகவும் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் ஹேமந்த் தரப்பு வக்கீல் வாதிட்டார். தொடர்ந்து ஐகோர்ட் உத்தரவை மேற்கோள் காட்டிய நீதிபதிகள் கோர்ட் சரியான உத்தரவை தான் பிறப்பித்துள்ளது என கருத்து தெரிவித்தனர்.

ஜூலை 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி