பழனி பஞ்சாமிர்தம் சர்ச்சையில் திருப்பம் | Palani Panchamirtham | BJP Selva Kumar
செல்போனை போலீசிடம் கொடுங்க பாஜ நிர்வாகிக்கு ஐகோர்ட் அதிர்ச்சி திருப்பதியில் லட்டு தயாரிக்கும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் பூதகரமாக வெடித்துள்ளது. இதற்கிடையில் பழனி பஞ்சாமிர்தம் குறித்தும் சில வதந்திகள் பரவியது. திருப்பதி தேவஸ்தானத்துக்கு லட்டு தயாரிக்க நெய் சப்ளை செய்த திண்டுக்கல் தனியார் நிறுவனம் பழனிக்கும் நெய் அனுப்புவதாக கூறப்பட்டது. பாஜ நிர்வாகிகள் செல்வகுமார், வினோஜ் இதுபற்றி சமூக வலைத்தள பக்கங்களில் பதிவு செய்திருந்தனர். குற்றச்சாட்டை மறுத்த அறநிலையத்துறை ஆவின் நிறுவனத்திடம் இருந்து தான் பஞ்சாமிர்தம் தயாரிக்க நெய் வாங்கப்படுகிறது என தெரிவித்தது. வதந்தி பரப்பியதாக பாஜ நிர்வாகிகள் செல்வகுமார், வினோஜ் மீது அறிநிலையத்துறை போலீசில் புகார் தந்தது. இதையடுத்து செல்வகுமார் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். நீதிபதி பரத சக்ரவர்த்தியிடம் முன் ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது. சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவு செய்யும் முன் அதன் உண்மை தன்மையை உறுதி செய்ய வேண்டும். பாஜ நிர்வாகி செல்வகுமார் சமூக வலைதளங்களில் வெளியிட்ட கருத்தை உடனடியாக நீக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து பொறுப்பற்ற முறையில் நடந்தால் சமூக ஊடகங்களில் இருந்து வெளியேற உத்தரவிட நேரிடும். செல்வகுமார் தனது செல்போனை போலீஸிடம் ஒப்படைக்க வேண்டும். அவருக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமின் வழங்கப்படுகிறது என நீதிபதி பரதன் உத்தரவிட்டார்.