உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / முதல்வருக்கே சம்பளம் இல்ல: சொதப்பிய சுக்விந்தர் ஆட்சி | Himachal Bhawan | Sukhvinder Singh Sukhu

முதல்வருக்கே சம்பளம் இல்ல: சொதப்பிய சுக்விந்தர் ஆட்சி | Himachal Bhawan | Sukhvinder Singh Sukhu

ஹிமாச்சல் பவன் கட்டடம் விற்பனைக்கு இருண்ட காலத்தில் தள்ளிய காங் ஆட்சி! ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தொடர்ச்சியான நிர்வாக தோல்விகள், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் காரணமாக சுக்விந்தர் அரசு மீது மக்களிடம் கடுமையான அதிருப்தி நிலவுகிறது. சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்றபோது​​ ஹிமாச்சல் மாநில உள்கட்டமைப்பை மேம்படுத்துவேன்; வேலையில்லாத் திண்டாட்டத்தை சரி செய்வேன்; பொருளாதாரத்தை வலுப்படுத்துவேன் என்றெல்லாம் வாக்குறுதிகள் அளித்தார். ஆனால் அதற்கான திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. மாறாக மாநிலத்தின் கடன் சுமை அதிகரித்து கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. 2 மாதங்களுக்கு முதல்வர் உட்பட ஹிமாச்சல் பிரதேச எம்எல்ஏக்களுக்கு சம்பளம், சலுகைகள் எதுவும் வழங்கப்படாது என கடந்த ஆகஸ்ட்டில் அறிவிக்கப்பட்டது. சரியான நிர்வாக திறன் இல்லாமல் சுக்விந்தர் சிங் எடுத்த முடிவுகள் மக்களுக்கு பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்பிடல்களில் அடிப்படை வசதிகள் இல்லை. அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை. அவர்களுக்கு தர சம்பளம் இல்லை. நிர்வாகத்தை நடத்த நிதி இல்லை என்று சுக்விந்தர் சிங் மீது புகார் மேல் புகார் குவிகிறது.

நவ 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ