இந்து ஆசிரியர்கள், அதிகாரிகள் வலுக்கட்டாயமாக ராஜினாமா! | Hindu teachers forced to resign | Banglades
முஸ்லிம் மாணவர்களால் மரத்தில் கட்டப்பட்ட இந்து ஆசிரியர் போராடி மீட்டது ராணுவம்! இட ஒதுக்கீடு தொடர்பான மாணவர்கள் போராட்டத்தால் வன்முறைக்காடானது வங்கதேசம். நிலைமை கை மீறியதால் பதவியை துறந்து அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா வெளியேறினார். அப்போதிலிருந்தே முஸ்லிம்கள் இந்து சமூகத்தின் மீது வன்முறை தாக்குதல்களை தொடங்கினர். அங்குள்ள இந்துக்கள் தினசரி துன்புறுத்தலை எதிர்கொண்டனர். கலவரத்தில் கோயில்கள், வணிக நிறுவனங்கள், இந்துக்களின் வீடுகள் குறிவைத்து தாக்கப்பட்டன. ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியில் அங்கம் வகித்த சில இந்துக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். அதன் பின் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என யூனுஸ் உறுதியளித்தார். ஆனால் இன்னும் நிலைமை அங்கு சரியாகவில்லை. இந்து ஆசிரியர்கள் கட்டாயமாக பணியை ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்படுகிறனர். ஹசீனா தலைமையிலான ஆட்சிக்கு நெருக்கமானவர்களாக கருதப்படும் பத்திரிகையாளர்கள் குற்றவாளிகளாகப் பார்க்கப்படுகின்றனர். அங்குள்ள ஒரு டிவி சேனலின் முன்னாள் ஆசிரியர் ஷகில் அகமது மற்றும் அவரது மனைவியும், பத்திரிகையாளருமான ரூபா ஆகியோர், பிரான்ஸ் செல்ல முயன்றபோது டாக்கா ஏர்போர்ட்டில் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டனர். இதுவரை பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த ஏறக்குறைய 70 இந்து ஆசிரியர்கள் ராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அங்குள்ள ஒரு அரசு பெண்கள் கல்லூரியின் முதல்வர் கீதாஞ்சலி முஸ்லிம் மாணவிகளால் தாக்கப்பட்டு மரத்தில் கட்டி வைக்கப்பட்டார். ராணுவம் தலையிட்டு போராட்டக்காரர்களை விரட்டி கீதாஞ்சலியை மீட்டது.