காங்கிரஸ் ஆட்சியாக இருந்திருந்தால் ரூ.12,000 கோடியை சுருட்டியிருப்பர் -பிரதமர் மோடி கடும் தாக்கு
கர்நாடகாவின் பெல்காமில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். விவசாயிகள் நலநிதி திட்டத்தின் கீழ் 8 கோடி விவசாயிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் 16 ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் மோடி விடுவித்தார். விவசாயிகள் நல நிதி திட்டத்தின்கீழ் வழங்கப்படும் 13வது தவணை இதுவாகும். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். புரோக்கர்களை ஒழித்து விட்டு, விவசாயிகளின் வங்கி கணக்கில் 16 ஆயிரம் கோடி ரூபாயை டிரான்ஸ்பர் செய்திருக்கிறோம். இந்நேரம் காங்கிரஸ் ஆட்சியாக இருந்திருந்தால் 16 ஆயிரம் கோடியில் 12 ஆயிரம் கோடி ரூபாயை சுருட்டியிருப்பார்கள் என்றார். 2014ல் விவசாயத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 25 ஆயிரம் கோடி ரூபாய். இன்று, அது 1 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது எனவும் மோடி கூறினார்.