உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சென்னை ஐகோர்ட்டில் அமலாக்க துறை பகீர் தகவல் | Illegal Sand Mining | Enforcement Directorate

சென்னை ஐகோர்ட்டில் அமலாக்க துறை பகீர் தகவல் | Illegal Sand Mining | Enforcement Directorate

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பத்து விஏஓ லூர்து பிரான்சிஸ், மணல் கொள்ளையர்களால் கடந்த 2023ல் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அமலாக்கதுறையும் விசாரணை நடத்தி வருகிறது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கதுறை தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யக் கோரி தமிழக டிஜிபிக்கு, கடந்த 2024ல் அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது.

அக் 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி