/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இந்தியாவிடம் பாகிஸ்தான் கெஞ்சும் பின்னணி | ind vs pak | pahalgam attack | shahbaz sharif iran visit
இந்தியாவிடம் பாகிஸ்தான் கெஞ்சும் பின்னணி | ind vs pak | pahalgam attack | shahbaz sharif iran visit
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு நடந்த 4 நாள் போரில் பாகிஸ்தானை இந்தியா பந்தாடியது. எல்லையில் உள்ள 25 நகரங்களை குறி வைத்து பாகிஸ்தான் ஏவி விட்ட 500க்கும் அதிகமான ட்ரோன்கள், ஏவுகணைகளை நடுவானிலேயே சுட்டுப்பொசுக்கியது. அதே நேரம் பதிலடியாக பிரமோஸ் உள்ளிட்ட ஏவுகணைகளை பயன்படுத்தி பாகிஸ்தான் ராணுவ தளங்களை இந்தியா பந்தாடியது. 11 முக்கிய விமானப்படை தளங்கள் உட்பட 13 இடங்களை துல்லியமாக குண்டு வீசி தகர்த்தது. நம் ராணுவத்தின் ஆக்ரோஷ பதிலடியை சற்றும் எதிர்பாராத பாகிஸ்தான், 4 நாட்களில் சமாதான கொடியை பிடித்தது.
மே 27, 2025