உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கூட்டணி கட்சிகளுக்கு பதவி தர திமுக முடிவு dmk| tvk| actor vijay| stalin| india alliance

கூட்டணி கட்சிகளுக்கு பதவி தர திமுக முடிவு dmk| tvk| actor vijay| stalin| india alliance

விஜய் அரசியல் பிரவேசம் மனம் இறங்கும் திமுக! தமிழகத்தில், 20க்கு மேற்பட்ட வாரிய தலைவர் பதவிகள் உள்ளன. திமுக நிர்வாகிகள் சிலருக்கு மட்டுமே வாரிய தலைவர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு, தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பதவி மட்டுமே தரப்பட்டது. முன்னாள் எம்.பி பீட்டர் அல்போன்ஸ், அப்பதவியில் 3ஆண்டுகள் இருந்தார். அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கவில்லை. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பேசிய விஜய், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவதாக அறிவித்தார். இதன்மூலம் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அவர் மறைமுக அழைப்பு விடுத்ததாகவே பார்க்கப்படுகிறது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மார்க்சிஸ்ட் கட்சிகளும், விஜய் அறிவிப்பை வரவேற்றன.

நவ 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை