உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அதிபர் சீட்டில் உட்கார்ந்ததும் அப்படியே மாறிய திசநாயகே | India vs Chinna | Anura Kumara Dissanayake

அதிபர் சீட்டில் உட்கார்ந்ததும் அப்படியே மாறிய திசநாயகே | India vs Chinna | Anura Kumara Dissanayake

இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே அபார வெற்றி பெற்றார். அதிபராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார். இலங்கையில் இடதுசாரி கட்சி தலைவர் ஒருவர் அதிபர் ஆனது இது தான் முதல் முறை. எனவே அவரது வெளியுறவுக்கொள்கை எப்படி இருக்கும் என்பது பற்றி பல ஊகங்கள் கிளம்பின. கம்யூனிஸ்ட் நாடான சீனாவுடன் ஒத்துப்போகும் நிலைப்பாட்டை அவர் எடுப்பார். இந்தியாவுடன் நெருக்கம் காட்டமாட்டார் என்ற பேச்சு பெரிய அளவில் அடிபட்டது. இந்த நிலையில் அதிபராக பொறுப்பேற்றப் பிறகு அவர் கொடுத்த முதல் பேட்டியே அதிர வைத்துள்ளது. அவர் கூறியது: புவி அரசியல் போட்டியில் இருந்து விலகி, சமநிலையை பேணவே எனது அரசு விரும்புகிறது. புவி அரசியலில் இனி இலங்கை ஒரு போட்டியாளராக இருக்காது.

செப் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி