/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இந்தியா-அமெரிக்கா உறவில் புது சகாப்தம் ஆரம்பம் | India-US Strategic Partnership
இந்தியா-அமெரிக்கா உறவில் புது சகாப்தம் ஆரம்பம் | India-US Strategic Partnership
இந்தியா-அமெரிக்கா இடையே கடந்த சில மாதங்களாக கடுமையான வர்த்தக போர் நிலவி வந்தது. டிரம்ப் நிர்வாகம் இந்தியப் பொருட்கள் மீது மொத்தம் 50 சதவிகிதம் வரை வரி விதித்திருந்தது. இதில் 25% வரி பரஸ்பர வரி என்ற பெயரிலும், மற்றுமொரு 25% கூடுதல் வரி இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காகவும் விதிக்கப்பட்டது. இதனால் இந்தியாவின் ஜவுளி, இன்ஜினியரிங் பொருட்கள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் அமெரிக்க சந்தையில் பெரும் பாதிப்பை சந்தித்தன. இதையடுத்து இரு நாடுகள் தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. விரைவில் வர்த்தக ஒப்பந்தம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என டிரம்ப் கூறி வந்தார்.
பிப் 03, 2026