ஆலோசனை வழங்க இந்தியா வருகிறார் இஸ்ரேல் பிரதமர் | Israel PM | PM Modi | Trump
டிரம்ப்பை டீல் செய்வது எப்படி? மோடிக்கு சொல்லி தருவேன் நெதன்யாகு விருப்பம் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ளார். டிரம்பின் இந்த செயலால் இருநாட்டு உறவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ரஷ்யா நமக்கு ஆதரவு அளித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், டிரம்ப்பை கையாள்வது எப்படி என பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட முறையில் ஆலோசனை வழங்குவேன் என கூறியுள்ளார். பிரதமர் மோடியும், அதிபர் டிரம்ப்பும் எனது நெருங்கிய நண்பர்கள். டிரம்ப்பை எப்படி கையாள்வது என பிரதமர் மோடிக்கு சில ஆலோசனை வழங்குவேன். தனிப்பட்ட முறையில் அதனை செய்வேன். விரைவில் நான் இந்தியா செல்லும் வாய்ப்பு உள்ளது. இந்தியா அமெரிக்கா இடையிலான உறவு வலுவானது. இதை கருத்தில் வைத்து இரு நாடுகளும், ஆலோசித்து வரி பிரச்னைக்கு முடிவு கட்ட வேண்டும். அந்தத் தீர்வு இரண்டு நாடுகளுக்கும், இஸ்ரேலுக்கும் உகந்தது என நெதன்யாகு கூறி உள்ளார்.