ஹமாஸ் கதை முடிக்க இஸ்ரேல் எடுத்த கடைசி ஆயுதம் Israel vs Hamas | Generals Plan | surrender or starve
போரா? சோறா? ஹமாசை முடிக்க இறுதி அஸ்திரம் இஸ்ரேல் முடிவால் உலகமே ஷாக்! கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். இதுதான் இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஹமாஸ் கதையை கிட்டத்தட்ட முடித்துவிட்ட இஸ்ரேல் இப்போது லெபனானில் உள்ள ஈரான் ஆதரவுப்பெற்ற ஹெஸ்புலா பயங்கரவாதிகளை குறிவைத்து வேட்டையாடி வருகிறது. அதே நேரம் ஹமாசை எதிர்த்து காசாவில் நடக்கும் போரை அரைகுறையாக விட்டு விடவும் இஸ்ரேலுக்கு மனம் இல்லை. ஹமாசை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடிங்கி எறிய சூப்பர் திட்டம் வேண்டும்; அதற்கு உடனே ஏற்பாடு செய்யுங்கள் என்று ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல்களுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கோரிக்கை வைத்திருந்தார்.