உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஈரானை தாக்க இஸ்ரேல் ரகசியமாக செய்த 3 எமகாதக செயல் israel vs iran | mossad iran | US | op rising lion

ஈரானை தாக்க இஸ்ரேல் ரகசியமாக செய்த 3 எமகாதக செயல் israel vs iran | mossad iran | US | op rising lion

சண்டை என்று வந்து விட்டால், வினோதமான தாக்குதல்களை நடத்தி எதிரி நாட்டை நிலைகுலைய செய்வதில் இஸ்ரேல் கில்லாடியான நாடு. உண்மையில் இந்த தாக்குதல் எப்படி நடந்தது என்பதை இஸ்ரேல் சொல்லாமல், அதன் எதிரி நாட்டால் புரிந்து கொள்வது மிகவும் கடினம். அப்படி தான் ஹெஸ்புலா போரை துவங்கும் முன்பு பேஜர் அட்டாக், வாக்கி டாக்கி அட்டாக் என்று வினோத தாக்குதலை நடத்தி உலகையே புருவம் உயர்த்த வைத்தது. ஹெஸ்புலாவின் பேஜர், வாக்கி டாக்கி ஆர்டரை இஸ்ரேலின் போலி நிறுவனம் ரகசியமாக கைப்பற்றியது. பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகளில் சக்தி வாய்ந்த வெடிமருந்தை சிறிதளவு நிரப்பியது. கிட்டத்தட்ட டைம் பாம் போன்று செட் செய்தது. இஸ்ரேலில் இருந்து ரிமோட் மூலம் அவற்றை வெடிக்க வைக்க முடியும். ஹெஸ்புலா கைக்கு பேஜர், வாக்கி டாக்கிகள் சென்றன. அவற்றை உடனடியாக இஸ்ரேல் வெடிக்க வைக்கவில்லை. தேவை வரும் வரை காத்திருந்தது. ஹமாசுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஹெஸ்புலா தீவிர தாக்குதலை ஆரம்பித்தது.

ஜூன் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை