/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஈரான் உச்ச தலைவர் கமெனி என்ன ஆனார்? பகீர் ரிப்போர்ட் israel vs iran where is khamenei | idf vs irgc
ஈரான் உச்ச தலைவர் கமெனி என்ன ஆனார்? பகீர் ரிப்போர்ட் israel vs iran where is khamenei | idf vs irgc
12 நாட்களாக உலகை உலுக்கிய இஸ்ரேல், ஈரான் போர் ஒரு வழியாக முடிவுக்கு வந்து விட்டது. ஈரானில் இப்போது குண்டு சத்தம் கேட்கவில்லை. மாறாக இன்னொரு சத்தம் ஓங்கி ஒலிக்கிறது. மக்கள் எல்லோரும், ‛கமெனி எங்கே... கமெனி எங்கே... என்று உரத்த குரலில் கேட்க ஆரம்பித்து விட்டனர். 84 வயதான கமெனி தான் ஈரானின் உச்ச தலைவர். 1989 முதல் 36 ஆண்டுகளாக அவர் தான் ஈரானை வழிநடத்துகிறார். ஈரானில் அவர் சொல்வது தான் சட்டம்; சாசனம் எல்லாம். அவ்வளவு சக்தி வாய்ந்த தலைவரை தான் எங்கே என்று ஈரானியர்கள் கேட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
ஜூன் 26, 2025