இஸ்ரேலுடன் போர்! அரபு நாடு அதிரடியின் பின்னணி Israel vs Jordan | Israel vs Hamas | Trump gaza plan
இஸ்ரேலை பந்தாட அடுத்த போர் படைகளை குவிக்கும் அரபு நாடு மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏன்? நான் அதிபர் ஆனால் மத்திய கிழக்கில் பற்றி எரியும் போரை உடனடியாக நிறுத்துவேன் என்று அமெரிக்க அதிபர் தேர்தலின் போதே டிரம்ப் சொன்னார். அதே போல் அவர் வெற்றி பெற்றதும் இஸ்ரேல்-ஹெஸ்புலா போர் முடிவுக்கு வந்தது. அவர் பதவி ஏற்புக்கு முந்தைய நாளில் இஸ்ரேல்-ஹமாஸ் போரும் முடிவுரை எழுதியது. சொன்னது போலவே டிரம்ப் போரை நிறுத்தி விட்டாரே என்று உலக நாடுகள் பாராட்டும் போது தான், புதிதாக மிகப்பெரிய போரை கொண்டு வரும் தாடலடி அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார். இஸ்ரேல், காசா இடையே நடக்கும் நிலச்சண்டை தான், இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு அடிநாதமாக விளங்கியது. காசாவில் முழு பவரை காட்ட துடிக்கும் ஹமாஸ், இஸ்ரேல் மீது போர் தொடுத்தது. அப்படி இருக்க பாலஸ்தீனுக்கு சொந்தமான அந்த காசாவை இனி அமெரிக்கா எடுத்துக்கொள்ளும் என்று அறிவித்தார் டிரம்ப். போரால் பாதிக்கப்படும் மக்கள் இனியாவது நிம்மதியாக வாழ வேண்டும். அவர்களை பத்திரமாக பக்கத்து நாடுகளுக்கு அனுப்பி வைப்போம். பிறகு, மொத்த காசாவையும் அமெரிக்கா எடுத்துக்கொள்ளும். அங்குள்ள ஆயுதங்கள், தகர்ந்து கிடக்கும் வீடுகளை அகற்றி விட்டு, மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வோம். சர்வதேச நகரமாக அதை அறிவிப்போம். உலகில் உள்ள யார் வேண்டுமானாலும் காசாவில் வசிக்க முடியும். அதன் பிறகு உலகின் அற்புதமான இடமாக காசா மாறி விடும் என்று டிரம்ப் சொன்னார். சொந்த மண்ணை விட்டு நாங்கள் ஏன் போக வேண்டும் என்று காசாவில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள் கொந்தளித்தனர். இப்படி ஒரு காரியத்தை டிரம்ப் செய்ய நினைத்தால், மத்திய கிழக்கில் மிகப்பெரிய போர் வெடிக்கும் என்று ஹமாசும் எச்சரித்தது. இந்த நிலையில் தான் இஸ்ரேலின் பக்கத்து நாடான ஜோர்டன், இஸ்ரேல் மீது போர் தொப்போம் என்று மிரட்ட ஆரம்பித்து இருக்கிறது. இதற்கும் டிரம்ப் அறிவிப்பு தான் காரணம். காசாவை பாலஸ்தீனியர்கள் மொத்தமாக காலி செய்ய வேண்டும் என்று சொன்ன டிரம்ப், அவர்களை எகிப்தும், ஜோர்டனும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நிர்பந்தம் செய்தார். இது தொடர்பாக எகிப்து அரசாங்கத்திடும், ஜோர்டன் மன்னரிடமும் தான் பேசி விட்டதாக சொன்னார். ஆனால் ஜோர்டனுக்கு இதில் துளியும் விருப்பம் இல்லை. காரணம், காசா, மேற்கு கரை பகுதியில் இப்போதும் இதற்கு முன்பும் இஸ்ரேல் நடத்திய போர்களில் இருந்து தப்பிக்க பாலஸ்தீன் மக்கள் லட்சம் லட்சமாக ஜோர்டனுக்குள் தான் புகுந்தனர். கொஞ்சம் நஞ்சமல்ல. இப்பவும் 20 முதல் 30 லட்சம் பேர் ஜோர்டனில் அகதிகளாக உள்ளனர். மொத்த ஜோர்டன் மக்கள் தொகையே 1.2 கோடி தான். இதில் 30 லட்சம் பேர் பாலஸ்தீன் அகதிகள் என்றால் பாருங்கள். ஜோர்டனும் குட்டி நாடு தான். இருப்பினும் இஸ்ரேலை விட 4 மடங்கு பெருசு. ஆனால் அதன் பொருளாதாரம் இஸ்ரேல் அளவுக்கு சிறப்பாக இல்லை. இன்னும் காசாவில் இருக்கும் பாலஸ்தீனியர்கள் ஜோர்டானுக்குள் வந்தால் அந்த நாட்டால் தாங்கிக்கொள்ள முடியாது. எனவே தான் டிரம்ப் முடிவை ஜோர்டான் கடுமையாக எதிர்க்கிறது. அது மட்டும் அல்ல. துவக்கம் முதலே இஸ்ரேல்-ஹமாஸ் போரில் காசா மக்களுக்கு ஆதரவாக ஜோர்டான் குரல் கொடுத்து வருகிறது. காசா பாலஸ்தீனியர்களுக்கு சொந்தமானது. அவர்கள் தங்கள் சொந்த நிலத்தில் தான் வாழ வேண்டும். வலுக்கட்டாயமாக அவர்களை வெளியேற்றக்கூடாது. எந்த வடிவத்தில் அவர்களை வெளியேற்ற நினைத்தாலும் அதை ஜோர்டான் ஏற்காது என்று டிரம்ப் முடிவுக்கு பதில் அளித்துள்ளது. பக்கத்து நாடுகளின் எதிர்ப்பை மீறி காசா மக்களை அமெரிக்கா வெளியேற்றினால் அவர்கள் எப்படியும் எகிப்து மற்றும் ஜோர்டானுக்குள் தான் நுழைவார்கள். இதனால் ஜோர்டானின் மேற்கு எல்லையை மூட அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அப்படி மூடும் எல்லையை இஸ்ரேல் திறக்க வேண்டும் என்று நிர்பந்தித்தால், அது ஜோர்டானை போருக்கு அழைப்பதற்கு சமம் என்று அந்நாட்டு தலைவர்கள் கூறி உள்ளனர். அது மட்டும் இல்ல; இஸ்ரேலுடன் பகிர்ந்து வரும் மேற்கு எல்லையில் இப்போதே படைகளை குவிக்க ஆரம்பித்து இருக்கிறது ஜோர்டான். கிட்டத்தட்ட 400 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரு நாடுகளும் எல்லையை பகிர்கின்றன. இங்கு 10 ஆயிரம் பட்டாலியன் வீரர்களை நிலை நிறுத்த ஜோர்டன் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் இஸ்ரேல், ஜோர்டன் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. ஒரு வேளை இஸ்ரேல்-ஜோர்டன் போர் வெடித்தால், நிச்சயம் ஜோர்டனுக்கு தான் இழப்பு. பொருளதார மற்றும் ராணுவ வலிமை கொண்ட இஸ்ரேலிடம் ஜோர்டானால் மோதி வெல்ல முடியாது. ஆனால் காசா மக்கள் மற்றும் ஜோர்டானுக்கு ஆதரவாக ஈரான், சிரியா, சவுதி அரேபியா, உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் சண்டைக்கு வரக்கூடும். இதனால் மிகப்பெரிய போர் வெடிக்கும் அபாயம் உள்ளது. அமெரிக்காவின் நேரடி ஆதரவு இருப்பதால் இஸ்ரேல் அதையும் சுலபமாக சமாளித்து விடும். எந்த ரூபத்தில் போர் வந்தாலும் ஜோர்டானால் இஸ்ரேலை வெல்ல முடியாது என்று தெரியும். ஆனால் போராடுவதை தவிர வேறு வழியே இல்லை என்று அந்நாட்டின் தலைவர்கள் பேசி வருகின்றனர். ஆனால் இந்த விவகாரத்தில் டிரம்ப் முரண்டு பிடிக்கிறார். உலகின் பல நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியை நிறுத்தியது. எகிப்து, இஸ்ரேலுக்கு மட்டும் நிறுத்தவில்லை. ஜோர்டானுக்கும் வழங்கி வந்த நிதியையும் தடாலடியாக டிரம்ப் நிறுத்தி விட்டார். வழிக்கு வந்தால் தான் நிதி தருவோம் என்று சொல்லாமல் சொல்கிறார் டிரம்ப். ஜோர்டான் வழிக்கு வருமா அல்லது போருக்கு வருமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.