உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அதிகாலை இறங்கிய அதிகாரிகள் 40 இடங்களில் ரெய்டு | Jaffer Sadiq | Jaffer Sadiq house raid | DMK

அதிகாலை இறங்கிய அதிகாரிகள் 40 இடங்களில் ரெய்டு | Jaffer Sadiq | Jaffer Sadiq house raid | DMK

டில்லியில் இருந்து வந்த ரகசிய தகவல் ஜாபர் சாதிக் வீட்டில் சல்லடை சென்னையில் ஒரு சிலர் பண பட்டுவாடா செய்வதாக டெல்லியில் இருந்து ரகசிய தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் வருமானவரி மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் இறங்கி உள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 40 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. முக்கியமாக சென்னையில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்குக்கு தொடர்புடைய இடங்களில் காலை முதல் ரெய்டு நடக்கிறது. இவர் 2000 கோடி போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறை சென்றவர். இப்போது ஜாமினில் உள்ளார். அண்ணா சாலை மற்றும் புரசைவாக்கம் பகுதியில் அவருக்கு சொந்தமான விடுதிகள், பட்டினப்பாக்கத்தில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீடு உட்பட 10க்கும் அதிக இடங்களில் அதிகாரிகள் சல்லடை போடுகின்றனர். முழுமையான சோதனைக்கு பின் பண பட்டுவாடாவில் ஈடுபட்டாரா என்பது தெரிய வரும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

ஏப் 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !