ஜாபர் சாதிக்கை மீண்டும் காவலில் எடுக்க EDக்கு அனுமதி! | Jaffer Sadiq | Drug Mafia | DMK
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கை, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மார்ச் மாதம் கைது செய்தனர். அவர் டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். போதை பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக ஜாபர் சாதிக் மீது வழக்கு பதிந்த அமலாக்கத்துறை, ஜூன் 26ல் அவரை கைது செய்தது. அமலாக்கத்துறை வழக்கில் சிறை மாற்று வாரன்ட் மூலம் நேற்று சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஜாபர் சாதிக் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாபர் சாதிக்கை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு அமலாக்கத்துறை சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் மனு செய்திருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, ஜாபர் சாதிக்கை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தார். 19-ம் தேதி மாலை அவரை நேரில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார். அதன்படி இன்று அமலாக்கத்துறை காவல் முடிந்து ஜாபர் சாதிக், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டார்.