உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 2 மாநில தேர்தலில் தொடர்ந்து வளர்ச்சியை காண்பித்த பாஜ | Jammu Kashmir election| JK Election result

2 மாநில தேர்தலில் தொடர்ந்து வளர்ச்சியை காண்பித்த பாஜ | Jammu Kashmir election| JK Election result

ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தல் ரிசல்ட் வெளியாகி உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் ஒமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, 42 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக பாஜ 29 இடங்களில் வென்று பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் 6, PDP 3 இடங்களில் வென்றுள்ளன. சுயேட்சைகள் 7 இடங்களிலும், ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சி, சிபிஎம் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தலா 1 இடத்தை கைப்பற்றி உள்ளன. ஜம்மு - காஷ்மீரில் ஆட்சி அமைக்க 46 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், தேசிய மாநாட்டு கட்சியும், காங்கிரசும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளன. ஒமர் அப்துல்லா முதல்வராக பொறுப்பேற்பார் என தேசிய மாநாட்டு கட்சி அறிவித்துள்ளது. ஜம்முவில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் பாஜ வெற்றி பெற்றாலும், காஷ்மீரில் கணக்கை துவங்க முடியவில்லை. அதே போல், காஷ்மீரில் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்த தேசிய மாநாட்டு கட்சி, ஜம்முவில் அதன் பலத்தை நிரூபிக்க முடியவில்லை. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின் படியே ஜம்மு - காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி தலைமையில் ஆட்சி அமைய உள்ளது. எனினும், இதுவரை இல்லாத வகையில் அங்கு பாஜ எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில், 2002 சட்டசபை தேர்தலில் 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜ, 2008 தேர்தலில் 11 இடங்களில் வென்றது. 2014 தேர்தலில் 25 இடங்களில் வெற்றி பெற்று பிடிபியுடன் கூட்டணி ஆட்சி அமைத்தது.

அக் 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !