உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வர விடமாட்டோம் | Amit Shah | Union Home Minster

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வர விடமாட்டோம் | Amit Shah | Union Home Minster

மீண்டும் சிறப்பு அந்தஸ்தா? அது நடக்கவே நடக்காது அமித்ஷா தடாலடி ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 என மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பாஜ தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று வெளியிட்டார். பின்னர் பேசிய அவர், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்த வழங்கிய 370வது சட்டப்பிரிவு மீண்டும் கொண்டு வரப்படமாட்டாது. அதனை நடக்கவிட மாட்டோம். இந்த சட்டம் இளைஞர்களின் கைகளில் ஆயுதத்தையும், கற்களையும் கொடுத்தது என்றார். ஜம்மு காஷ்மீரில் பாஜ ஆட்சி அமைத்தால் ஆண்டுதோறும், குடும்பத்தில் உள்ள முதிய பெண்களுக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்படும். உஜ்வாலா திட்டத்தின் கீழ் 2 சிலிண்டர் வழங்கப்படும். தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும் குஜ்ஜார்களுக்கான இட ஒதுக்கீட்டில் கையை வைக்க அனுமதிக்க மாட்டோம். பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படுவதை உறுதி செய்வோம். 3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மாநிலத்தில் பயங்கரவாதிகள் அழித்த கோயிலை மீண்டும் கட்டுவோம். சுற்றுலாவை வளர்க்க பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும் அமித் ஷா கூறினார்.

செப் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை