அத்துமீறும் ரசிகர்களை அடக்கி வைக்க வானதி வலியுறுத்தல்!
முதல்வர் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் நேற்று தமிழகம் முழுவதும் வெளியானது. திருச்சி மாவட்டத்தில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டது. படம் வெளியானதை அடுத்து திரையரங்குகளில் விஜய் ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். திருச்சி தெப்பக்குளம் அருகே உள்ள ஒரு தியேட்டரில் முதல்வர் விஜய்க்கு திருஷ்டி இருப்பதாகக் கூறி, சேவல் பலியிட்டு அதன் ரத்தத்தை விஜய் பேனர் மீது ரசிகர் ஒருவர் தெளித்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. இதனை பாஜ தேசிய மகளிரணி தலைவி வானதி கண்டித்துள்ளார். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்கள் எல்லாம் உண்மையாகவே அறிவு முதிர்ச்சி பெற்றவர்கள் தானா என்ற சந்தேகம் எழுகிறது ஏழைகளுக்கு உதவுவது, அன்னதானம் கொடுப்பது என அபிமான நட்சத்திரங்களின் படங்களை கொண்டாட எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால் கடவுள்களுக்கு உகந்த சில செயல்களை, நம்பிக்கைகளை நடிகர்கள் முன் திணிப்பது நாளடைவில் மற்றவர்களும் பின்பற்றத் தொடங்கும் தவறான உதாரணமாகி விடும். இதெல்லாம் என்ன மாதிரியான மனநிலை என்றே தெரியவில்லை. இனி இதுபோன்ற செயல்களை அனுமதிக்கா வண்ணம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க தவெக அரசை வலியுறுத்துவதாக வானதி அந்த பதிவில் தெரிவித்துள்ளார். #CMVijay #Jananayagan_Release #Seval #Vijay_banner #fans_celebration #tvk_cadres #vanathi_condemns #Bjp #Trichy #Tamilnadu #TNbjp #vijay_movie #Movie_theatre #Viral_video #TNpolitics #Politicalnews #Breakingnews