மோடியை சந்திக்கும் ஹேமந்த்; ஜார்கண்ட்டில் அரசியல் மாற்றம் வருமா? Jharkhand Politics| hemant sorens
ஜார்கண்ட் சட்டசபைக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் இண்டி கூட்டணி 56ல் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வர் ஆனார். தற்போது அவர் என்டிஏ கூட்டணியில் சேரப்போவதாக கூறப்படுகிறது. மாநில திட்டங்களுக்கு மத்திய அரசின் உதவி தேவைப்படுவதாக முதல்வர் சிபுசோரன் உணர்கிறார். அதற்காக அவர் என்டிஏ கூட்டணியில் சேர விரும்புவதாக தெரிகிறது. அண்மை காலமாக பாஜ மூத்த தலைவர்களையும் அவர் சந்தித்து வருகிறார். பீகார் தேர்தலில் இண்டி கூட்டணியில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு ஒரு சீட் கூட தரப்படவில்லை. இது முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஜார்க்கண்ட் அமைச்சரவையில் ஆர்ஜேடிக்கு இடம் கொடுத்தும், பீகார் தேர்தலில் மதிக்கவில்லை என்ற கோபம் ஹேமந்த்துக்கு இருக்கிறது. அதை கட்சி நிர்வாகிகள் மூலமும் அவர் வெளிப்படுத்தினார். ஜார்க்கண்ட் அமைச்சரவையை மாற்றி அமைப்போம் என அவரது கட்சி நிர்வாகிகள் கூறிவந்தனர். ஹேமந்த் சோரன் கூட்டணி மாற்றுவதற்கு இதெல்லாம் காரணமாக இருக்கலாம் என பேசப்படுகிறது. ஜார்கண்ட் கவர்னர் சந்தோஷ் கங்வார் சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. #JharkhandPolitics #hemantsorens #alliancedilemma