/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கரூர் குவாரி தாக்குதல்: செய்திதுறை அமைச்சருக்கே தெரியாதாம் | Minister Denial | Journalist Assault
கரூர் குவாரி தாக்குதல்: செய்திதுறை அமைச்சருக்கே தெரியாதாம் | Minister Denial | Journalist Assault
கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே சிவாயம் என்ற கிராமத்தில் கனிமவளக் கொள்ளை நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இங்குள்ள கல்குவாரிக்கு கடந்த 2022ல் 23.55 கோடி அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டும், அந்த கல்குவாரி செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளன. இந்நிலையில், இங்கு நடக்கும் கனிமவளக் கொள்ளை தொடர்பாக தனியார் டிவியின் திருச்சி நிருபர் கதிரவன் செய்தி சேகரிக்க சென்றார். அப்போது கனிம வளக் கொள்ளைக்கும்பல், கதிரவனை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி உள்ளது. ஒளிப்பதிவாளரிடம் இருந்த கேமரா, மைக் உள்ளிட்டவற்றை பிடுங்கி வைத்துக் கொண்டு கொலை வெறித்தாக்குதல் நடத்தினர்.
பிப் 02, 2026