நாதக பாதை முடிகிறது: காளியம்மாள் பரபரப்பு அறிக்கை | Kaliammal Resigned | NTK | Seeman
நாதகவுக்கு முழுக்கு போட்டார் முக்கிய நிர்வாகி காளியம்மாள் நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாளுக்கும் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் கட்சிப் பணிகளில் இருந்து காளியம்்மாள் ஒதுங்கி இருந்தார். அவர் திமுக அல்லது தவெக-வில் சேரக்கூடும் என செய்திகள் பரவின. அனைத்துக்கும் அமைதி காத்துவந்த காளியம்மாள் இன்று நாதகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கட்சியை குடும்பத்திற்கு மேலாக நேசித்தேன். 6 ஆண்டு பயணம் எனக்கு பல அனுபவங்களை கொடுத்தது. தமிழ் தேசிய வெற்றியும், அதை மக்களிடம் கொண்டு சேர்த்தல் என்னும் உன்னத நோக்கமும்தான் நம் பெருங்கனவு. அதை அடையவேண்டும் என்ற பாதையில் நானும் பயணித்ததில் பெருமை. இந்த பாதை இவ்வளவு சீக்கிரம் முடியும் என நான் கனவிலும் நினைக்கவில்லை. கடந்த 6 வருடமாக சமூக மாற்றத்திற்கு ஒரு பெண்ணாக இருந்து எவ்வளவு முடியுமோ, அந்தளவுக்கு போராடியிருக்கிறேன். கால சூழலால் நான் உயிராக எண்ணி வழிநடந்த நாம் தமிழர் கட்சி எனும் இந்தப்பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது. அவதூறு வெறும் வார்த்தைகள் தானே என நினைத்து அள்ளி தெளிப்பவர்களுக்கு மத்தியில் என் மீது அளப்பரிய அன்பு கொண்டு நேசிக்கிற அத்தனை பேருக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டவளாக இருப்பேன். தமிழ்த் தேசியத்தை விதைக்கும் வழியில் எம் பயணம் தொடரும் என காளியம்மாள் கூறியுள்ளார்.