உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மேற்கு வங்கத்தில் எம்.பி.க்கள் மீது தொடர் தாக்குதல்

மேற்கு வங்கத்தில் எம்.பி.க்கள் மீது தொடர் தாக்குதல்

மேற்கு வங்கத்தில் எம்.பி.க்கள் மீது தொடர் தாக்குதல் |Trinamool #Bjp |Mamata |Westbengal |Hoogly |MP_kalyan_Mukherjee |MP_Attacked #Protest |Dharna #violence மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பின்னர் அரசியல்ரீதியாக நாள்தோறும் ஏதேனும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. நேற்று தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சோனாப்பூருக்கு மம்தா பானர்ஜியின் மருமகனும் எம்பியுமான அபிஷேக் பானர்ஜி சென்றார் தேர்தல் நேரத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார். அப்போது பெண்கள் உள்ளிட்ட பலர், அவர் மீது அழுகிய முட்டைகளையும், கற்களையும் வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர் இந்த நிலையில், கைது செய்யப்பட்ட கட்சி நிர்வாகிகளை விடுவிக்க கோரி ஹூக்லி யில் உள்ள சாண்டிதலா Chanditala காவல் நிலையம் முன், திரிணாமுல் எம்பி கல்யாண் முகர்ஜி கட்சியினருடன் திரண்டார். பாஜவினரும் அங்கு குவிந்தனர். திரிணாமுல் கட்சியினரை பார்த்து திருடர்கள் என்று பாஜவினர் கூறியதாக தெரிகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது கற்களை வீசி தாக்கியதில் எம்பி கல்யாணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பாஜவை சேர்ந்த குண்டர்கள் தன்னை கல்லை கொண்டு தாக்கியதாகவும், இதனை போலீசார் வேடிக்கை பார்ப்பதாகவும் எம்பி கல்யாண் குற்றம்சாட்டினார் காயத்தில் ஈரத்துணியை சுற்றிக்கொண்டு காவல் நிலையத்தின் முன்பு பாஜகவினருக்கு எதிராக கோஷம் எழுப்பி எம்பி கல்யாண் போராட்டத்தில் ஈடுபட்டார் பின்னர் முதலுதவி சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வெடுத்த கல்யாணை கட்சித்தலைவர் மம்தா நேரில் சென்று நலம் விசாரித்தார்

மே 31, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

V.Mohan
ஜூன் 04, 2026 13:22

இவிங்க 15 வருஷமா செஞ்சதை இப்போ 1 சதவீதமாவது அனுபவிச்சாதான் தாங்கள் செய்த தவறு கொஞ்சமாவது புரியும். முதலில் மம்தாவையும் அவிங்க மருமகனையும் அரெஸ்ட் பண்ணி ஜெயிலில் போட்டு சாவியை தூக்கி வங்காள விரிகுடாவில் வீச வேண்டும்


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை