மேயருக்கு எதிராக பொங்கிய கவுன்சிலர்கள் திடீர் எஸ்கேப் kanchipuram| kanchi corporation
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 கவுன்சிலர்கள் உள்ளனர். திமுகவை சேர்ந்த மகாலட்சுமி மேயராக இருக்கிறார். சில மாதங்களாகவே மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே போர்க்கொடி தூக்கியுள்ளனர். மேயர் மகாலட்சுமியின் கணவர் யுவராஜ் உள்ளிட்டோர் நிர்வாகத்தில் தலையிடுவது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. மேயர் யாரையும் மதிப்பது இல்லை; வார்டுகளில் அடிப்படை வளர்ச்சிப்பணிகள் கூட நடப்பது இல்லை; மக்களிடம் எங்களுக்கு கெட்ட பெயர்தான் ஏற்படுகிறது எனக்கூறினர். திமுக கவுன்சிலர்களுக்கு கூட்டணி மற்றும் எதிர்கட்சி கவுன்சிலர்கள் சிலரும் ஆதரவு தந்தனர். அமைச்சர் நேரு, திமுக அமைப்பு செயலாளர் அன்பகம் கலை உள்ளிட்டோர் அதிருப்தி கவுன்சிலர்களை சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. மேயரை மாற்ற வலியுறுத்தி சமீபத்தில் கலெக்டர் அலுவலகத்தில் கவுன்சிலர்கள் திரண்டு முறையிட்டனர். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தாலும், அதை கமிஷனர் ஏற்பது இல்லை என்றும் குறை கூறினர்.