உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பெண் எம்எல்ஏ ஆர்ப்பாட்டம் கன்னியாகுமரியில் பரபரப்பு | Kanyakumari | Mathur Thotti palam

பெண் எம்எல்ஏ ஆர்ப்பாட்டம் கன்னியாகுமரியில் பரபரப்பு | Kanyakumari | Mathur Thotti palam

குமரி தொட்டிப்பாலத்தில் காமராஜர் கல்வெட்டு உடைப்பு இயங்காத சிசிடிவி போலீசார் திணறல் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே மாத்தூரில் தொட்டி பாலம் அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ள அருவிக்கரை ஊராட்சிக்கும், வேர்கிளம்பி பேரூராட்சிக்கும் இடையில் பாசனத்துக்கு தண்ணீரை கொண்டு செல்ல இந்த தொட்டிப்பாலம் 1966ல் கட்டப்பட்டது. ஆசியாவிலேயே உயரமான, நீளமான தொட்டிப்பாலம் இது என்பதால் இப்பகுதி சுற்றுலா ஸ்தலமாக விளங்குகிறது. முன்னாள் முதல்வர் காமராஜரின் முயற்சியால் கட்டப்பட்ட இந்த பாலத்தின் முகப்பில் கல்வெட்டு இருந்தது. அதில் காமராஜரின் உருவப்படம் இருந்தது. நேற்றிரவு மர்ம ஆசாமிகள் கல்வெட்டை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். போலீசார் வந்து உடைந்த பாகங்களை அவசர அவசரமாக அங்கிருந்து அகற்றினர். கஞ்சா மற்றும் போதை ஆசாமிகளின் கூடாரமாக தொட்டிப்பாலம் பகுதி மாறி வருவதாக உள்ளூர்வாசிகள் குற்றம்சாட்டினர். சிசிடிவிக்கள் இயங்காததால் உடைத்தவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர். காமராஜர் கல்வெட்டு உடைக்கப்பட்டதை கண்டித்தும், இதன் பின்னணியில் உள்ள குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பட் தலைமையில் காங்கிரசாரும் நாடார் சங்கத்தினரும் நுழைவு வாயில் அருகே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் நாளைக்குள் கல்வெட்டை மீண்டும் அமைப்பதாகவும், சிசிடிவிக்கள் செயல்பட நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

பிப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி