சித்தராமையா, சிவக்குமார் மோதல் ராகுலுடன் தனித்தனியாக சந்திப்பு Karnataka cm siddaramaiah DK Shivaku
2023 மே 10ல் கர்நாடகா சட்ட சபை தேர்தல் நடந்தது. காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. முதல்வர் பதவிக்கு சித்தராமையாவும், டிகே சிவக்குமாரும் போட்டியிட்டனர். காங்கிரஸ் மேலிடம் முதல் இரண்டரை ஆண்டு சித்தராமையாவும், அடுத்து வரும் இரண்டரை ஆண்டு டிகே சிவக்குமாரும் முதல்வராக இருப்பார்கள் என்ற சமரச திட்டத்தை வகுத்ததாக கூறப்பட்டது. இதையடுத்து முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார். 2023 மே 20-ல் அவர் முதல்வர் ஆனார். துணை முதல்வராக டிகே சிவக்குமார் பொறுப்பேற்றார். கடந்த நவம்பரில் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு பதவிக் காலம் முடிவுக்கு வந்தது. டிகே சிவக்குமார் தன்னை முதல்வர் ஆக்கும்படி கட்சி மேலிடத்தை வற்புறுத்தி வருகிறார். 5 ஆண்டுகளும் நானே முதல்வராக செயல்படுவேன் என்று சித்தராமையாவும் கூறி வருகிறார். இதனால் கர்நாடக அரசியலில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நேற்று நீலகிரி மாவட்டம் கூடலூர் பள்ளி விழாவுக்கு செல்ல மைசூர் விமான நிலையம் வந்தார். அங்கு கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் டிகே சிவக்குமாரும் ராகுலை வரவேற்றனர். அப்போது சித்தராமையாவை ராகுல் தனியாக அழைத்து பேசினார். அதே போல டிகே சிவக்குமாரையும் தனியாக அழைத்து பேசினார். இது கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராகுல் இருவரையும் தனித் தனியாக சந்தித்து பேசியது, முதல்வர் மாற்றம் தொடர்பாக இருக்கலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால் முதல்வர் சித்தராமையா அதை மீண்டும் ஒரு முறை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது முதல்வரை மாற்றுவது குறித்து கட்சிக்குள் எந்த பிரச்னையும் இல்லை. ஊடகங்கள் குழப்புகின்றன. இது குறித்து காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு முழுமையாக எதுவும் தெரியவில்லை நானோ, சிவக்குமாரோ இது குறித்து பேசினாமா? இல்லை. காங்கிரஸ் எம்எல்ஏக்களும் இது குறித்து பேசுவதை நிறுத்திவிட்டனர். மீடியாக்கள்தான் பேசிக்கொண்டு இருக்கின்றன. கட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ அதற்கு நான் கட்டுப்பட்டு நடப்பேன். நான் இரண்டாவது முறையாக கர்நாடக முதல்வராக இருக்கிறேன். முதல்வர் பணியில் ஆயிரமாவது தினத்தை வரும் பிப்ரவரி 13ல் தொடுகிறேன். அன்றைய தினம் சாதனை மாநாடு நடத்த திட்டமிட்டு வருகிறோம் என முதல்வர் சித்தராமையா கூறினார். மைசூர் விமான நிலையத்தில் சித்தராமையா மற்றும் சிவக்குமாரை சந்தித்து பேசிய ராகுல், டில்லி வரும்படி இருவரையும் அழைத்திருப்பதாக கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு பிறகு இருவரும் டில்லி சென்று ராகுலை சந்திக்க உள்ளனர். #KarnatakaPolitics #Siddaramaiah #DKShivakumar #RahulGandhi #CMChange #KarnatakaCongress #PowerTussle #MysoreAirportDrama #CongressHighCommand #Siddaramaiah1000Days