/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கடைசி நொடி வரை பதற்றம் - குன்றம் மலை உச்சியில் நடந்த சம்பவங்கள் | Karthigai Deepam
கடைசி நொடி வரை பதற்றம் - குன்றம் மலை உச்சியில் நடந்த சம்பவங்கள் | Karthigai Deepam
மலை ஏறிய திருவண்ணாமலை டீம் நேற்று மாலை வரை என்ன நடந்தது? நேற்றைய தினம் சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்றப்படுமா என்கிற எதிர்பார்ப்பு முருக பக்தர்களிடம் கடைசி வரை இருந்தது. இதற்கிடையே சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க, மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை நீக்கக்கோரி, நேற்று நடந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட் உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை அறிவுறுத்தியது. அப்போது, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்தவே, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என, அரசு தரப்பு தெரிவித்து, நீதிமன்றத்தை நம்ப வைத்தது. ஆனாலும், தீபத்துாணில் தீபம் ஏற்றவில்லை.
நவ 25, 2026