உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கரூர் சம்பவம்... விஜய் என்ன சொல்கிறார் karur stampede vijay rally stampede | vijay on karur tragedy

கரூர் சம்பவம்... விஜய் என்ன சொல்கிறார் karur stampede vijay rally stampede | vijay on karur tragedy

வரிக்கு வரி உறவே என்று உருக்கம் விஜய் வெளியிட்ட 2வது அறிக்கை கரூரில் நடந்த தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிர் இழந்தது நாட்டையே உலுக்கிப்போட்டுள்ளது. இந்த கோர சம்பவம் தொடர்பாக விஜய் வெளியிட்ட 2வது அறிக்கை: கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன். நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது.

செப் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை