உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பிரதமர் பதவியை தட்டி தூக்கிய ஸ்டார்மர் யார்? | Who is Keir Starmer | next British PM | UK election

பிரதமர் பதவியை தட்டி தூக்கிய ஸ்டார்மர் யார்? | Who is Keir Starmer | next British PM | UK election

பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்? பரபரப்பாக நடந்த பிரிட்டன் பார்லிமென்ட் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியின் 14 ஆண்டு கால ஆட்சிக்கு தொழிலாளர் கட்சி முடிவுரை எழுதி இருக்கிறது. வியாழக்கிழமை ஓட்டுப்பதிவு நடந்த கையோடு ஓட்டு எண்ணும் பணியும் துவங்கியது. பிரிட்டனில் மொத்தம் 650 பார்லிமென்ட் சீட். ஆட்சியை பிடிக்க 326 சீட் தேவை. துவக்கம் முதலே தொழிலாளர் கட்சி கை ஓங்கியது. ஒரு கட்டத்தில் அந்த கட்சி 410 இடங்களை வென்றது. தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இமாலய வெற்றியின் மூலம் தொழிலாளர் கட்சி தலைவரும் அக்கட்சி பிரதமர் வேட்பாளருமான கெய்ர் ஸ்டார்மர் Keir Starmer பிரதமர் ஆக பொறுப்பேற்பது உறுதியானது. இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரதமர் ரிஷி சுனக், கன்சர்வேடிவ் கட்சியின் மோசமான தோல்விக்கு பொறுப்பேற்றார். ஸ்டார்மருக்கும் சுனக் வாழ்த்து சொன்னார். பிரிட்டனின் அடுத்த பிரதமர் ஆக இருக்கும் கெய்ர் ஸ்டார்மருக்கு 61 வயதாகிறது. கடைசி 50 ஆண்டில் பிரிட்டனின் அதிக வயதான பிரதமர் என்ற பெருமை இவருக்கு கிடைக்கும். ஸ்டார்மர் அடிப்படையில் ஒரு வக்கீல். வடக்கு அயர்லாந்தில் அரசு தரப்பில் மனித உரிமை வக்கீலாக பணியாற்றியவர். கார்டன் பிரவுன் பிரதமராக இருந்த போது வேல்ஸ்சின் அரசு தரப்பு வக்கீல்களுக்கான இயக்குனராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து மனித உரிமைகள் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். டோனி பிளேயர் பிரதமராக இருந்த போது பிரிட்டன் அரசு ஈராக் மீது படையெடுத்தது. அதை கடுமையாக எதிர்த்தவர் ஸ்டார்மர். அது எல்லோரையும் கவனிக்க வைத்தது. மனித உரிமையை நிலைநாட்ட ஸ்டார்மர் மேற்கொண்ட பணிக்காக அவருக்கு நைட்ஹூட் பட்டத்தை இரண்டாம் எலிசபத் மகாராணி வழங்கினார்.

ஜூலை 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை