அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாண கவர்னர் தேர்தலில் கருப்பின பெண் கீஷா லான்ஸ் வெற்றி
கவர்னராக தேர்வான முதல் கருப்பின பெண் அமெரிக்க தேர்தலில் கீஷா லான்ஸ் வரலாறு அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சி ஆட்சி செய்து வரும் நிலையில், 435 பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள், 35 செனட் உறுப்பினர்கள் மற்றும் 36 மாகாண கவர்னர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 3ம் தேதி நடந்தது. 23 வாக்காளர்கள் ஓட்டுச் சீட்டு முறையில் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். அவை எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், இந்த தேர்தலில் அதிபர் டிரம்ப் தலைமையிலான ஆளும் குடியரசு கட்சி சறுக்கலை சந்தித்துள்ளது. பிரதிநிதிகள் சபை தேர்தலில் டிரம்ப்பின் குடியரசு கட்சி 139 இடங்களில் முன்னிலை பெற்ற நிலையில், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி 228 இடங்களில் வெற்றிப்பாதையில் முன்னேற டிரம்ப் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.