உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வயநாடு நிவாரண பணி தரவுகளில் மிகை இல்லை | kerala| wayanad| pinarayi vijayan

வயநாடு நிவாரண பணி தரவுகளில் மிகை இல்லை | kerala| wayanad| pinarayi vijayan

கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரி நிவாரணத்திற்காக மத்திய அரசின் நிதி உதவி கேட்டு கேரளா அரசு அறிக்கை தயாரித்துள்ளது. உடல் அடக்கம், ஊனமுற்றோர் மறுவாழ்வு போன்ற செலவிங்களுக்கான தொகையை மத்திய அரசு அப்படியே வழங்கிவிடும் என்ற நோக்கில் மிகைப்படுத்தி கணக்கு காண்பித்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் அளித்தார். வயநாடு நிலச்சரிவு தொடர்பாக, கேரள அரசின் புள்ளிவிவரங்கள் மற்றும் செலவு கணக்குகள் பற்றி பத்திரிகைகள் தவறான செய்திகை பரப்புகின்றன. மத்திய அரசு நிதியை நியாயமற்ற முறையில் பெற முயற்சிப்பாக சொல்வது தவறானது. இதனால், கேரள அரசுக்கும் மக்களுக்கும் உலகளவில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. எதிர்கட்சிகளும் இந்த அறிக்கை குறித்து பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன. பேரிடர் காலங்களில் குறிப்பேடு தயாரிப்பது அமைச்சர்கள் அல்ல. அந்தந்த துறையில் நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்கள்தான். அவர்கள் தயாரித்த தரவுகளை பத்திரிகைகள் தவறாக புரிந்து கெண்டன. அதில் உள்ள தரவுகள் மிகைப்படுத்தப்பட்டவை அல்ல; திட்டமிடப்பட்ட மதிப்புகள். கேரளாவின் நிலச்சரிவு மீட்பு மற்றும் நிவாரண பணிகள் பரவலாக பராட்டுகளை பெற்றது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என பினராயி விஜயன் கூறினார்.

செப் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை