உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / KMCயில் பாலியல் தொல்லை: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி | kilpauk government hospital | kmc

KMCயில் பாலியல் தொல்லை: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி | kilpauk government hospital | kmc

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மகளிர் வார்டில் தூங்கிக் கொண்டிரு்த பெண்ணுக்கு ஆசாமி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நோயாளிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒருவன் புகுந்து உள் நோயாளியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மீண்டும் தலைநகரில், மிக முக்கியமான அரசு மருத்துவமனைகளுள் ஒன்றில், இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது, ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது துளியும் இல்லை என்ற வெட்கக்கேடான நிலையை தெளிவாக காட்டிவிட்டது. பெண்கள் பாதுகாப்பு பற்றி சட்டசபையில் வசனம் பேசிய ஸ்டாலின் இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார்?

ஜன 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ