பார்லியில் நடக்கப்போகும் 32 மணி நேர விவாதம் | Kiren Rijiju | Union minister | Operation sindoor
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 21 வரை ஒரு மாத காலம் நடக்கும் கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் கூட்டதொடர் தொடங்கிய நாள் முதல் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், டிரம்பின் போர் நிறுத்த அறிவிப்பு, பீஹாரின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகளின் கூச்சல், குழப்பத்தால் சபை ஒத்திவைக்கப்பட்டு பார்லிமென்ட் அலுவல்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இந்த பரபரப்பான சூழலில் மத்திய பார்லிமென்ட் விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜூ டில்லியில் பேட்டியளித்தார்.