எதிர்கட்சிகளின் செயலை விமர்சித்த மத்திய அமைச்சர் | Kiren Rijiju | Parliamentary Affairs Minister
பார்லிமென்ட்டில் இதுவரை இப்படி நடந்ததில்லை கிரண் ரிஜிஜூ வருத்தம் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்துக்கு பதிலளித்து லோக்சபாவில் பிரதமர் மோடி நேற்று பேசினார். அப்போது அவரை பேச விடாமல் எதிர்கட்சியினர் நீட், மணிப்பூர் பிரச்சனைகளை எழுப்பி அமளி செய்தனர். தொடர் அமளிக்கு இடையிலும் பிரதமர் 2 மணி நேரம் பேசி முடித்தார். இன்று ராஜ்யசபாவில் மோடி பேசியபோதும் அமளி செய்த எதிர்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். பார்லிமென்ட்டில் பிரதமரை பேச விடாமல் எதிர்கட்சிகள் இடையூறு செய்த நடவடிக்கைக்கு பார்லிமென்ட் விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜூ வருத்தம் தெரிவித்துள்ளார். நாட்டின் பிரதமர், அவை தலைவர் அவையில் தனது கருத்தை முன்வைத்து பேசும் சமயத்தில், அது ஆளுங்கட்சியோ, எதிர்கட்சியோ யாராக இருந்தாலும் சரி, அனைவரும் கேட்க வேண்டும். ஜனநாயகத்தில் அனைவருக்கும் பேசும் உரிமை இருக்கிறது. அதேபோல் கவனிக்கவும் உரிமை உண்டு. லோக்சபாவில் பிரதமர் பேச தொடங்கியதும் காங்கிரசும், கூட்டணி கட்சியினரும் சேர்ந்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தி அவரது முழு பேச்சையும் தொந்தரவு செய்துவிட்டனர். பாரம்பரிய வழக்கப்படி அவருக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் அவர் பேசும்போது இடையூறு செய்வது வருத்தம் அளிக்கிறது.