/ தினமலர் டிவி
/ அரசியல்
/ நேபாளத்தின் அடுத்த பிரதமர் யார்? மாறி மாறி ட்விஸ்ட் | Nepal | KP Sharma Oli | Pushpa Kamal Dahal
நேபாளத்தின் அடுத்த பிரதமர் யார்? மாறி மாறி ட்விஸ்ட் | Nepal | KP Sharma Oli | Pushpa Kamal Dahal
நேபாளத்தில் கடந்த 2022 நவம்பரில் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க வேண்டிய பெரும்பான்மை கிடைக்கவில்லை. சிபிஎன் மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தாஹல் பிரசண்டா கூட்டணி அமைத்து பிரதமர் ஆனார். இவருக்கு முன்னாள் பிரதமர் சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உட்பட 4 கட்சிகள் ஆதரவு அளித்தன. பிரசண்டா மூன்றாவது முறையாக 2022 டிசம்பர் 25ல் பிரதமராக பதவியேற்றார். அதன்பின் கூட்டணி அரசுக்கான ஆதரவை நேபாள கம்யூனிஸ்ட் திரும்ப பெற்றது. இதனால் நேபாள காங்கிரசுடன் கூட்டணி அமைத்து பிரதமர் பதவியில் பிரசண்டா நீடித்தார்.
ஜூலை 12, 2024