பதில் பேச முடியாமல் திணறிய பாகிஸ்தான் அமைச்சர் | Kshitij Tyagi | Human Rights Council
இந்தியாவை பேச என்ன தகுதி இருக்கு? பாகிஸ்தானுக்கு ஐநாவில் விழுந்த குட்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைய கூட்டம் ஜெனிவாவில் புதனன்று நடந்தது. அப்போது ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி, இந்தியா மீது பாகிஸ்தான் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை எழுப்பியது. பாகிஸ்தானின் சட்டம், நீதி மற்றும் மனித உரிமைகள் துறை அமைச்சர் அசாம் நசீர் டரார் இந்தியாவை தாக்கி பேசினார். காஷ்மீரில் வசிக்கும் மக்கள் சுயமாக முடிவெடுக்கும் உரிமையை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. ஐநா சபையின் தீர்மானங்கள் மற்றும் சர்வதேச சட்டங்கள் மீறப்படுகிறது. மனித உரிமைகளும் தொடர்ந்து மீறப்படுகிறது. உடனே இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறினார். பாகிஸ்தானின் இந்தக் குற்றச்சாட்டுக்கு இந்திய அதிகாரி தியாகி தக்க பதிலடி கொடுத்தார். பாகிஸ்தானின் ஆதாரமற்ற, போலியான இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் சார்பு தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், அந்த நாட்டின் ராணுவ பயங்கரவாதத்தினர் எழுதி கொடுக்கும் பொய்களை பரப்புவதை பார்க்கும் போது வேதனை அளிக்கிறது. யூனியன் பிரதேசங்களான ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதிகளாகும். ஜம்மு காஷ்மீரில் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு வந்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி இருக்கிறது. இதுவே மக்கள் நம்பிக்கை பெற்ற மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு சாட்சியாகும். பாகிஸ்தானில் தான் மனித உரிமை மீறல்கள் அதிகம் நடக்கிறது. ஐநா சபை தடை பட்டியலில் உள்ள பயங்கரவாதிகளை வெட்கமின்றி வளர்க்கும் நாடாக உள்ளது. சொந்த மக்களுக்கு உண்மையான ஆட்சி மற்றும் நீதியை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டிய இடத்தில் அவர்கள் இல்லை என இந்திய அதிகாரி கூறினார்.