உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அலட்சியத்தால் நெல் வீணாவதால் விவசாயிகள் கவலை | Kumbakonam | Paddy damage | CM Vijay

அலட்சியத்தால் நெல் வீணாவதால் விவசாயிகள் கவலை | Kumbakonam | Paddy damage | CM Vijay

கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை செய்யப்படும் நெல், பட்டீஸ்வரம் அருகே திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன. 30 ஆயிரம் டன் வரை சேமித்து வைக்கக்கூடிய அந்த திறந்தவெளி கொள்முதல் நிலையத்தில், தற்போது 25 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. நெல் மூட்டைகள் அரவைக்காக அனுப்பி வைக்காமல் பல மாதங்களாக தேங்கி கிடக்கின்றன. தார்ப்பாய்கள் கிழிந்து நெல் மூட்டைகள் சேதமாகி உள்ளது. பல நெல் மூட்டைகள் மூடப்படவில்லை. நாள்பட்ட சாக்கு பைகள் கிழிந்து, நெல்மணிகள் கீழே கொட்டியும், மூட்டைகளிலே முளைத்தும் காணப்படுகின்றன

ஜூன் 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ