அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் தவெக வேட்பாளராக தேர்தலில் போட்டி | Logesh Tamilselvan | TVK
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில், சட்டசபை சபாநாயகராக இருந்தவர் தனபால். இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால், பிற சமுதாயத்தை சேர்ந்த சக எம்எல்ஏவாக தன்னை மதிப்பதில்லை என மிகவும் மனம் வருந்தினார். இந்த தகவல் ஜெயலலிதாவின் காதுகளுக்கு எட்டியது. இதையடுத்து, முதல்வராக இருந்த தான் உட்பட அனைத்து எம்எல்ஏக்களும் எழுந்து நின்று தனபாலுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரை சட்டசபை சபாநாயகராக்கினார் ஜெயலலிதா. இவரது மகன் லோகேஷ் தமிழ்செல்வனுக்கு, மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் தான் பெயர் சூட்டினார். லோகேஷின் திருமணத்தை ஜெயலலிதா முன்னின்று நடத்தி வைத்தார். லோகேஷுன் தந்தை வழியில் அதிமுகவில் இணைந்து கடந்த 15 ஆண்டுகளாக அரசியலில் பயணித்தார். கட்சியின் தொழில்நுட்ப பிரிவு மாநில நிர்வாகியாகவும் பதவி வகித்தார்.